என் மலர்
இந்தியா

X
அமெரிக்காவில் இருந்து பனாமாவுக்கு நாடு கடத்தப்பட்ட 12 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்
By
மாலை மலர்24 Feb 2025 2:30 AM IST (Updated: 24 Feb 2025 2:46 AM IST)

- சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்தும் நடவடிக்கையில் டிரம்ப் அரசு மேற்கொண்டு வருகிறது.
- இதுவரை அமெரிக்காவில் இருந்து மூன்று கட்டமாக இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். அப்போது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கி இருந்தவர்களை அந்நாட்டு அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் பிப்ரவரி முதல் வாரம் முதல் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தி வருகிறது. இதுவரை 3 கட்டமாக இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நான்காவது கட்டமாக 12 இந்தியர்களுடன் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் நேற்று டெல்லி வந்தடைந்தது. இவர்களில் 4 பேர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள், அரியானா மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தலா 3 பேர் ஆவர்.
Next Story
×
X