search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகாராஷ்டிராவில் கோர விபத்து: ரெயில் மோதி 8 பயணிகள் உயிரிழப்பு.. பலர் படுகாயம்
    X

    மகாராஷ்டிராவில் கோர விபத்து: ரெயில் மோதி 8 பயணிகள் உயிரிழப்பு.. பலர் படுகாயம்

    • ரெயிலில் தீப்பிடித்ததாக பரவிய தகவலை அடுத்து பயணிகள் பீதியடைந்தனர்.
    • ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகளில் சிலர் அருகில் உள்ள தண்டவாளத்தில் நின்றனர்

    மகாராஷ்டிராவில் ரெயிலில் தீப்பிடித்ததாக அஞ்சி தண்டவாளத்தில் குதித்த பயணிகள் மீது மற்றொரு ரெயில் மோதி கோரமான விபத்து ஏற்பட்டது.

    மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள பச்சோரா ரெயில் நிலையத்திற்கு அருகே இன்று மதியம் புஷ்பக் எக்ஸ்பிரஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது ரெயிலில் தீப்பிடித்ததாக பரவிய தகவலை அடுத்து பயணிகள் பீதியடைந்தனர்.

    இதனால் அவரச சங்கிலியை பிடித்து இழுத்து பயணிகள் ரெயிலை நிறுத்தினர். நிறுத்தப்பட்ட ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகளில் சிலர் அருகில் உள்ள தண்டவாளத்தில் நின்றனர். அப்போது அவ்வழியாக வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரெயில் அவர்கள் மீது மோதிது. இதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தவும், சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காணவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீப்பிடித்ததாகத் தவறான செய்தி எப்படி பரவியது என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×