search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கடும் பனிமூட்டம்: டெல்லியில் ரெயில், விமான சேவை பாதிப்பு

    • டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை கடும் பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது.
    • டெல்லி ரெயில் நிலையத்தில் இருந்து பெரும்பாலான ரெயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்படுகின்றன.

    புதுடெல்லி:

    வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை கடும் பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது.

    இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பல விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    கடும் பனிமூட்டம் நிலவி வந்தாலும் டெல்லி ரெயில் நிலையத்தில் இருந்து பெரும்பாலான ரெயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்படுகின்றன. மேலும் பல்வேறு ரெயில் நிலையங்களில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாகவும், மிதமான பனிமூட்டத்துடன் காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல் உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குளிர் நீடிப்பதால் நகரம் முழுவதும் அடர்ந்த மூடுபனியால் சூழப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கையின்படி, அயோத்தியில் குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாக உள்ளது.

    Next Story
    ×