என் மலர்
இந்தியா
காலடியில் கிடக்கும் பெண் மருத்துவர்.. வெட்கத்தில் கண்களை மூடிக் கொள்ளும் துர்கை! கொல்கத்தாவின் ராத்திரி
- மேற்கு வங்க மாநிலத்தின் பிரதான பண்டிகையான துர்கா பூஜா கொண்டாட்டங்கள் கலைகட்டத் தொடங்கியுள்ளன
- பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் காணச் சகிக்காது கண்களை மூடியுள்ளார்
மேற்கு வங்க மாநிலத்தின் பிரதான பண்டிகையான துர்கா பூஜா கொண்டாட்டங்கள் கலைகட்டத் தொடங்கியுள்ளன. தலைநகர் கொல்கத்தாவில் வருடந்தோறும் நவராத்திரி கொண்டாட்டத்தில் பல்வேறு விஷயங்களில் பின்னணியில் துர்கை சிலை பந்தல்கள் உருவாக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த வருடம் அமைக்கப்பட்டுள்ள பந்தல் ஒன்று கவனம் ஈர்த்து வருகிறது. சமீபத்தில் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது அனைவரும் அறிந்ததே நாடு முழுவதும் மருத்துவர்களின் போராட்டம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியிருந்தது.
கொல்கத்தாவிலும் இந்நாள்வரை போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு துர்கா பூஜா பந்தல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 'அவமானம்' என்ற தலைப்பில் அமைக்கப்பட்ட அந்த பந்தலில் பல கைகள் கொண்ட தேவி துர்க்கை இரு கைகளால் கண்களை மறைத்தவாறு வெட்கத்தில் நிற்பதுபோல் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் காணச் சகிக்காது அவர் கண்களை மூடுவது போல் இது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சிலைக்கு முன்பு வெள்ளைத் துணியால் பெண் மூடப்பட்டு விழுந்துகிடப்பது போன்றும், மருத்துவர்களின் உடை சுவரில் தொங்குவதுபோன்றும் அந்த பந்தலில் அமைக்கப்பட்ட இந்த பந்தல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
#Watch: A Durga Puja pandal in #Kolkata based on the theme of RG Kar Hospital incident. Organiser Biswajit Sarkar says that the theme is 'lajja' & Goddess Durga is ashamed of the incident that shook the state. pic.twitter.com/WC44jHpDgP
— Pooja Mehta (@pooja_news) October 3, 2024