என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![மகாராஷ்டிரா: சிறுத்தையை மண்டபத்தில் பூட்டிவிட்டு ஓடிய சிறுவனின் சிசிடிவி வீடியோ வைரல் மகாராஷ்டிரா: சிறுத்தையை மண்டபத்தில் பூட்டிவிட்டு ஓடிய சிறுவனின் சிசிடிவி வீடியோ வைரல்](https://media.maalaimalar.com/h-upload/2024/03/06/2015122-leopard.webp)
மகாராஷ்டிரா: சிறுத்தையை மண்டபத்தில் பூட்டிவிட்டு ஓடிய சிறுவனின் சிசிடிவி வீடியோ வைரல்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- திருமண மண்டபத்தில் புகுந்த சிறுத்தையை, புத்திசாலித்தனமாக கதவைப் பூட்டிவிட்டு சிறுவன் தப்பியோடிய சிசிடிவி வீடியோ வைரலாகியுள்ளது.
- சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டில் அடைத்தனர்.
மகாராஷ்டிராவில் உள்ள மாலேகான் நகரில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் புகுந்த சிறுத்தையை, புத்திசாலித்தனமாக மண்டபத்திற்குள் வைத்து பூட்டிவிட்டு சிறுவன் தப்பியோடிய சிசிடிவி வீடியோ வைரலாகியுள்ளது.
அந்த சிசிடிவி வீடியோவில், 'திருமண மண்டபத்தின் கதவு பக்கத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் மொபைல் போனில் கேம் விளையாடி கொண்டிருக்கிறான். அப்போது கதவின் உள்ளே சிறுத்தை ஒன்று மெதுவாக வருகிறது. அதனை பார்த்த சிறுவன் எந்த பதட்டமும் இல்லாமல் வெளியே சென்று மண்டபத்தின் கதவை பூட்டி விடுவது' பதிவாகியுள்ளது.
பின்னர், அச்சிறுவன் ஊர் மக்களிடம் இதை பற்றி தகவல் சொல்ல, அவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டில் அடைத்தனர்.
இன்று காலை 7 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சிறுவனின் தந்தை அந்த மண்டபத்தில் காவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
महाराष्ट्र के मालेगांव में एक घर में अचानक घुसा तेंदुआ, बच्चे ने समझदारी दिखाते हुए तेंदुए को घर में किया बंद, CCTV में कैद हुई पूरी घटना
— AajTak (@aajtak) March 6, 2024
बच्चे की समझदारी को 10 में से कितने मार्क्स देंगे?#Malegaon #Maharashtra #ViralVideo #Leopard #ATYourSpace pic.twitter.com/gg5SuUuR9H