search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகளை கொல்ல காசு கொடுத்து ஆள் செட் செய்த தாய்.. இறுதியில் நடந்த டுவிஸ்ட்
    X

    மகளை கொல்ல காசு கொடுத்து ஆள் செட் செய்த தாய்.. இறுதியில் நடந்த டுவிஸ்ட்

    • மகளைக் கொலை செய்ய சுபாஷ் என்ற நபரை ரூ. 50,000 காசு கொடுத்து ஏற்பாடு செய்துள்ளார் தாய்.
    • இதுதெரியாமல் மகளை கொல்ல சுபாஷுக்கு அல்கா பணம் கொடுத்துள்ளார்.

    மகள் காதலிப்பதைப் பிடிக்காமல் அவளை கொலை செய்ய காசு கொடுத்து ஒருவரை ஏற்பாடு செய்துள்ளார் தாய். கடைசியில் அந்த நபரால் தாயே கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஏதா [Etah] மாவட்டத்தில் வசித்து வந்தவர் 42 வயதான அல்கா தேவி [Alka Devi]. இவருக்கு 17 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். தனது மகள் யாருடனோ காதலில் இருப்பதை சகித்துக்கொள்ள முடியாமல் மகளைக் கொலை செய்ய சுபாஷ் என்ற நபரை ரூ. 50,000 காசு கொடுத்து ஏற்பாடு செய்துள்ளார் அல்கா.

    இதற்கிடையே தனது மனைவி அல்கா வீட்டுக்கு வரும் வழியில் காணாமல் போனதாக அவரது கணவர் ராம்காந்த் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கழுத்து நெரிக்கப்பட்டு அல்கா சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸ் நடத்திய விசாரணையில் உண்மை வெளியே வந்துள்ளது. அதாவது, தனது மகளை கொல்ல அல்கா சுபாஷ் என்ற நபரை நியமித்திருந்ததும் அதே சுபாஸ் மகளுக்கு பதிலாக பணம் கொடுத்து கொலை செய்ய சொன்ன அல்காவை கொன்றுள்ளது தெரியவந்தது. ஆனால் சுபாஷ் ஏன் அல்காவை கொல்ல வேண்டும் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அதன் காரணமும் தெரியவந்துள்ளது.

    அதாவது, அல்காவின் மகளை காதலித்து வந்ததே சுபாஷ்தான். இதுதெரியாமல் மகளை கொல்ல சுபாஷுக்கு அல்கா பணம் கொடுத்துள்ளார். எனவே சுபாஷும் அல்காவின் 17 வயது மகளும் சேர்ந்து திட்டம் ஒன்றை தீட்டியுள்ளனர். அல்காவின் மகளை கொலை செய்துவிட்டதுபோல் பொய்யாக புகைபடங்களை எடுத்து அதை தாய் அல்காவுக்கு அனுப்பி வைத்து மேலும் அதிக பணம் கேட்டுள்ளார் சுபாஷ்.

    இதுதொடர்பாக பேச சுபாஷை சந்திக்க அல்கா நேரில் வந்த நிலையில் அல்காவின் மகள் மற்றும் சுபாஷ் இருவரும் அல்காவை ஊருக்கு ஒதுக்குபுறமான விவசாய நிலத்துக்கு கடத்திச் சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். இந்த உண்மைகள் அனைத்தும் தற்போது வெளிவந்துள்ள நிலையில் அல்காவின் மகளும் சுபாஷும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×