என் மலர்
இந்தியா
வங்கியில் ரூ.40,000 லோன் வாங்கி இளம்பெண்ணை ஆள் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த உறவினர்
- பாதி எரிந்த துணி, காலணி, மோதிரம், ஹேர் கிளிப் மற்றும் உள்ளாடைகளை வைத்து உறுதி செய்தனர்.
- அங்கு மூவரும் பெண்ணை முதலில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதியில் உள்ள பாவனா கிரமத்தில் வசித்து வந்த 21 வயது இளம்பெண் கடந்த ஜனவரி 21 ஆம் தேதி காணாமல் போனார். இதுதொடர்பாக போலீஸ் நடத்திய தேடுதலில் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து அப்பெண்ணின் மண்டை ஓடு மற்றும் உடல் நேற்று முன் தினம் [வெள்ளிக்கிழமை] கண்டெடுக்கப்பட்டது.
பெண்ணின் உடல் எறிந்த நிலையில் இருந்ததால் முதலில் அடையாளம் காணுவதில் சிக்கல் இருந்தது. ஆனால் அது தங்கள் மகள்தான் என பாதி எரிந்த துணி, காலணி, மோதிரம், ஹேர் கிளிப் மற்றும் உள்ளாடைகளை வைத்து பெண்ணின் பெற்றோர் உறுதி செய்தனர். பெண் காணாமல் போன ஜனவரி 21 அன்று கடைசியாக தனது சகோதரியின் கணவர் ஆதிஷ் உடன் ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.
ஆதிஷ் இடம் விசாரணை நடத்தியதில் இருவரும் இடையே 2 வருடங்களாக தகாத உறவு இருந்தது என்று தெரியவந்தது. இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து அப்பெண் ஆதிஷ் - ஐ தன்னை முறையே ஏற்றுக்கொள்ளும்படி மிரட்டியுள்ளார். இதனால் கலக்கமடைந்த ஆதிஷ் தனது இரண்டு சகாக்களுடன் சேர்ந்த பெண்ணை ஒழித்துக்கட்ட திட்டம்தீட்டியுள்ளான்.
கொலை செலவுக்காக வங்கியில் ரூ.40,000 கடன் வாங்கியுள்ளான். அதில் ரூ.10 ஆயிரத்தை சகாக்களுக்கு அட்வான்ஸ் ஆக கொடுத்துள்ளான். காரியம் முடிந்த பின்னர் மேலும் ரூ.20,000 தருவதாக வாக்கு கொடுத்துள்ளான். தொடர்ந்து பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு ஆதிஷ் அழைத்து வந்துள்ளான். அங்கு மூவரும் பெண்ணை முதலில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அதன்பின் துப்பட்டாவால் பெண்ணின் கழுத்தை நெரித்து கொன்றனர்.
பிறகு உடலை பெட்ரோல் ஊற்றி எரித்து ஆதாரத்தை அழித்தனர். பெண்ணின் மற்ற உடைகள் எறிந்த நிலையில் அவரின் கீழ் உள்ளாடை மட்டும் எரியாமல் இருந்ததும், அவரின் அருகே இரண்டு காண்டம் பாக்கெட்டுகள் கண்டெடுக்கப்பட்டதும் அவர் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதி செய்கின்றன.
இதுதொடர்பாக பாரதீய நியாய சன்ஹிதா [BNS] கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிந்த போலீசார் ஆதிஷ் -ஐ கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற இரண்டு பேரை தேடி வருகின்றனர்.