என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![ஆம் ஆத்மியின் காயத்துக்கு சிறு கட்டு!.. கல்காஜி தொகுதியில் வெற்றி பெற்ற அதிஷி ஆம் ஆத்மியின் காயத்துக்கு சிறு கட்டு!.. கல்காஜி தொகுதியில் வெற்றி பெற்ற அதிஷி](https://media.maalaimalar.com/h-upload/2025/02/08/9076301-mm10.webp)
ஆம் ஆத்மியின் காயத்துக்கு சிறு கட்டு!.. கல்காஜி தொகுதியில் வெற்றி பெற்ற அதிஷி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ரமேஷ் பிதுரி 48478 வாக்குகளை பெற்றார்
- காங்கிரஸ் வேட்பாளர் அல்கா லம்பா வெறும் 4367 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.
பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
பாஜக 48, ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது. புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலாவருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஜங்புராவில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வியைத் தழுவினர்.
இந்நிலையில் ஆம் ஆத்மிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி முதல்வர் அதிஷி வெற்றி பெற்றுள்ளார்.
எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியை விட 3580 வாக்குகள் முன்னிலையில் 52058 வாக்குகளுடன் அதிஷி வெற்றி பெற்றுள்ளார். ரமேஷ் பிதுரி 48478 வாக்குகளை பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் அல்கா லம்பா வெறும் 4367 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.