என் மலர்
இந்தியா

X
10 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட ஆதார் எண்ணுடன் புதிய விவரங்களை சேர்க்க அறிவுறுத்தல்
By
மாலை மலர்12 Oct 2022 8:21 AM IST

- ஆதார் எண்களை வழங்கும் அரசு முகமை (யு.ஐ.டிஏ.ஐ.) இதை தெரிவித்துள்ளது.
- ‘மை ஆதார்’ இணையதளம் மூலமாக இதை செய்யலாம்.
புதுடெல்லி :
10 ஆண்டுகளுக்கு முன் தனித்த ஆதார் அடையாள எண் பெற்று இதுவரை புதிய விவரம் எதுவும் சேர்க்காதவர்கள் உடனடியாக அந்த விவரங்களை சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் எண்களை வழங்கும் அரசு முகமை (யு.ஐ.டிஏ.ஐ.) நேற்று வெளியிட்ட அறிக்கையில் இதை தெரிவித்துள்ளது.
இதுவரை தற்போதைய விவரங்களை இணைக்காதவர்கள், தங்களின் அடையாள, இருப்பிடச் சான்றுகளை உரிய கட்டணம் செலுத்தி இணைத்து கொள்ளலாம். 'மை ஆதார்' இணையதளம் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள ஆதார் மையம் மூலமாகவோ இதை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், புதிய விவரங்களை சேர்ப்பது கட்டாயம் என்று தெரிவிக்கப்படவில்லை.
Next Story
×
X