என் மலர்
இந்தியா
மாப்பிள்ளை இல்லாத திருமண ஊர்வலம் போன்றது பா.ஜ.க.வின் பிரசாரம்: ஆம் ஆத்மி காட்டம்
- சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
- ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. நகலெடுத்துள்ளது என்றார் மீனாட்சி சர்மா.
புதுடெல்லி:
டெல்லி சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் மும்முனைப் போட்டியை ஏற்படுத்தியுள்ளன.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
டெல்லியில் தற்போது ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி, இந்த முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்பில் உள்ளது.
இந்நிலையில், கிழக்கு டெல்லியின் விஷ்வாஸ் நகர் சட்டசபை தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் பிரசாரக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் மீனாட்சி சர்மா கூறியதாவது:
பா.ஜ.க.வில் உள்ள எந்தத் தலைவரும் அடிமட்ட அளவில் வேலை பார்க்கவில்லை. பா.ஜ.க.வில் உட்கட்சி பூசலால் முதல் மந்திரி வேட்பாளராக யாரும் அறிவிக்கப்படவில்லை. பா.ஜ.க.வின் தேர்தல் பிரசாரம் ஆனது ஒரு மாப்பிள்ளை இல்லாமல் திருமண ஊர்வலம் போவது போன்றது. ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. நகலெடுத்துள்ளது என குற்றம்சாட்டினார்.