search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
    X

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

    • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு அங்கு தேர்தல் திருவிழா களைகட்டியது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

    இந்நிலையில், தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடித்திட ஒரு பொது பார்வையாளர், ஒரு காவல் பார்வையாளர் என 2 தேர்தல் பார்வையாளர்களை இந்திய தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.

    பொது பார்வையாளராக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜ்குமார் யாதவ் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் வரும் 7-ம் தேதி முதல் மார்ச் மாதம் 2-ம் தேதி வரை அங்கு பணியில் இருப்பார்.

    காவல் பார்வையாளராக ஆந்திராவைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி சுரேஷ்குமார் சாதிவ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் வரும் 7-ம் தேதி முதல் தேர்தல் நடைபெறும் நாளான 27-ம் தேதி வரை தேர்தல் காவல்பணியில் இருப்பார்.

    இதேபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயகுமார் ஜெயராமன் அருணாசல பிரதேச இடைத்தேர்தலுக்கும், ஐ.ஏ.எஸ். அதிகாரி இ.ரவீந்திரன் மேற்குவங்காள இடைத்தேர்தலுக்கும் பொது பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளது.

    Next Story
    ×