search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வெளிப்படையாக பணம் வினியோகம்: பாஜக வேட்பாளர் போட்டியிட தடைவிதிக்க வேண்டும்- கெஜ்ரிவால் புகார்
    X

    வெளிப்படையாக பணம் வினியோகம்: பாஜக வேட்பாளர் போட்டியிட தடைவிதிக்க வேண்டும்- கெஜ்ரிவால் புகார்

    • புது டெல்லி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வேலைவாய்ப்பு முகாம் அமைத்து, வெளிப்படையாக பணம் வினியோகம் செய்கிறார்.
    • வாக்குகளை நீக்க வேண்டும் என 5,500 விண்ணப்பங்கள் வந்துள்ளது. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் போலியானது.

    டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற இடங்களுக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. நாளை மனுதாக்கல் தொடங்குகிறது.

    ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் புது டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக பர்வேஷ் வர்மா என்பவரை நிறுத்தியுள்ளார்.

    இந்த நிலையில் பர்வேஷ் வர்மா வெளிப்படையாக பணம் வினியோகம் செய்கிறார். அவர் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகளை சந்தித்து கெஜ்ரிவால் புகார் அளித்துள்ளார்.

    அரவிந்த் கெஜ்ரிவால் தனது புகாரில் "புது டெல்லி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வேலைவாய்ப்பு முகாம் அமைத்து, வெளிப்படையாக பணம் வினியோகம் செய்கிறார். தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின் கீழ் இந்த விசயங்கள் ஊழல் செயல்பாட்டின் கீழ் வரும். பர்வேஷ் வர்மா தேர்தலில் போட்டியிடுவதற்கு தடைவிதிக்க வேண்டும். அவரது வீட்டில் எவ்வளவு பணம் வைத்துள்ளார் என்பதை வெளிக்கொண்டு வர சோதனை நடத்தப்பட வேண்டும்.

    புது டெல்லியில் டிசம்பர் 15-ந்தேதியில் இருந்து ஜனவரி 7-ந்தேதி வரைக்கும் 22 நாட்களில் வாக்குகளை நீக்க வேண்டும் என 5,500 விண்ணப்பங்கள் வந்துள்ளது. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் போலியானது.

    அதிகாரிகள் இந்த விஷயத்தை அறிந்ததும், வாக்குகளை ரத்து செய்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்ட நபர்களை அழைத்துபோது, தங்கள் பெயரில் போலி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். ஒரு பெரிய மோசடி நடக்கிறது. கடந்த பதினைந்து நாட்களில், புதிய வாக்குகளுக்காக 13,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன... பிற மாநிலங்களிலிருந்து ஆட்களை அழைத்து வந்து போலி வாக்குகள் உருவாக்கப்படுகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×