என் மலர்
இந்தியா
ஆளுநர் மாளிகை பாஜகவின் பினாமி ஆபீஸ்.. தற்காலிக முதல்வர் எனக் கூறிய சக்சேனாவுக்கு அதிஷி பதிலடி
- அதிஷியை தற்காலிக முதல்வர் என அரவிந்த கெஜ்ரிவால் அழைத்து வருவது வேதனையளிக்கிறது
- தேவையில்லாத குறுக்கீடுகளால் முக்கிய பணிகளில் தாமதம் ஏற்படுத்துகிறார்.
டெல்லி மாநில மதுபானக் கொள்ளை தொடர்பான மோசடி வழக்கில் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், ஜாமின் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த உடன் மக்கள் தன்னை நிரபராதி என அழைக்கும் வரை முதல்வர் பதவியை பெற மாட்டேன் என தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அதிஷி டெல்லி முதல்வராக கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி பதவி ஏற்றார்.
இந்த நிலையில்தான் அதிஷியை தற்காலிக முதல்வர் என அரவிந்த கெஜ்ரிவால் அழைத்து வருவது வேதனையளிக்கிறது என டெல்லி மாநில துணைநிலை ஆளுநர் சக்சேனா தெரிவித்துள்ளார். அதிஷியை தற்காலிக முதல்வர் என அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பது வேதனையளிக்கிறது என்று நேற்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் ஆளுநர் சக்சேனாவுக்கு அதிஷி பதிலடி கொடுத்துள்ளார். தனது புத்தாண்டு வாழ்த்து அறிக்கையில் சக்சேனாவின் கருத்துக்கு பதிலளித்த அதஷி, வரவிருக்கும் புத்தாண்டில் ஆளுநர் தனது கட்டைப் பை அரசியலை [baggage of politics] விட்டுவிட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஆளுனரின் நடவடிக்கைகளில் உள்ள பிரச்சனைகளை சுட்டிக்காட்டிய அதிஷி, [அரசுக்கு] ஆக்கப்பூர்வமான வகையில் ஒத்துழைப்பதை விட [அரசியல்] விமர்சனம் செய்வதற்கே ஆளுநர் முக்கியத்துவம் அளிக்கிறார். தேவையில்லாத குறுக்கீடுகளால் முக்கிய பணிகளில் குறுக்கிட்டு தாமதம் செய்கிறார். மகிளா சம்மான் யோஜனாவை [மகளிருக்கு மாதம் ரூ.1000 திட்டத்தை] நிறுத்தினார்
உங்களுக்கு நேரடியாக கொடுக்கப்பட்ட ஒரே வேலையான நகரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வேலையிலும் ஆளுநர் முற்றிலுமாக தோல்வியடைந்துள்ளீர்கள். டெல்லியில் தினந்தோறும் குழந்தைகள் மற்றும் பெண்கள் கடத்தப்பட்டு தாக்கப்பட்டு வரும் நிலையில், எங்கள் தலைவர்கள்[ ஆம் ஆத்மி] மீது தினமும் ரெய்டு மற்றும் விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவுகளை வழங்கி, அர்த்தமற்ற கலங்கத்தை ஏற்படுவதை வேலையாக வைத்துள்ளீர்கள்.
உங்கள் செயல்களால் மக்கள் லெப்டினன்ட் கவர்னர் பதவி மேல் வைத்திருந்த மரியாதையை குலைத்துள்ளீர்கள். உங்கள் குறுக்குபுத்தி அரசியலை கைவிடுங்கள்.
டெல்லி ஆளுநர் மாளிகை இப்போது பாஜகவின் பினாமி அலுவலகமாக செயல்படுகிறது என்று விளாசிய அதிஷி, தற்காலிக முதல்வர் என்ற கருத்து குறித்து எழுதுகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் உண்மையில் தற்காலிகமானவர்கள் மற்றும் காலம் வரை மட்டுமே பதவியில் இருப்பார்கள் என்பது நமது நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளுக்கு ஒரு சான்று.
ஜனநாயகத்தின் இந்த யதார்த்தத்தை எடுத்துக்காட்டும் எந்தவொரு அறிக்கையையும் நீங்கள் புண்படுத்துவதைக் கண்டிக்கிறேன். இதற்கு பதிலாக டெல்லி மீது கவனம் செலுத்துங்கள் என்று காட்டமாகத் தெரித்துள்ளார்.