என் மலர்
இந்தியா
கெஜ்ரிவால் வாழ்வுடன் விளையாடுகிறீர்களா?: அமித்ஷா, மோடியை சாடிய அதிஷி
- பஞ்சாப் போலீஸ் கெஜ்ரிவாலுக்கு பாதுகாப்பு வழங்கி வந்தது.
- கெஜ்ரிவாலுக்கு வழங்கிய பாதுகாப்பை பஞ்சாப் போலீஸ் திரும்பப் பெற்றது.
புதுடெல்லி:
டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முன்னாள் முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபட்டு வருகிறார்.
கெஜ்ரிவாலுக்கு பஞ்சாப் மாநில போலீசார் வழங்கும் பாதுகாப்பை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் டெல்லி போலீசார் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து, கெஜ்ரிவாலுக்கு வழங்கி வந்த பாதுகாப்பை பஞ்சாப் மாநில போலீஸ் திரும்பப் பெற்றது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இசட்-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. விமானி, பாதுகாப்பு அணிகள், நெருங்கிய பாதுகாப்பு ஸ்டாப் உள்பட 63 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் மத்திய ஆயுத போலீஸ் படையினர் 15 பேரும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பஞ்சாப் போலீசார் அளித்த பாதுகாப்பை வாபஸ் பெற்றதற்கு முதல் மந்திரி அதிஷி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிஷி கூறுகையில், பஞ்சாப் போலீசார் அளித்த பாதுகாப்பை வாபஸ் பெற்றதன் மூலம் அமித்ஷாவும் பிரதமர் மோடியும் கெஜ்ரிவால் வாழ்வில் விளையாடுகிறார்களா? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.