என் மலர்
இந்தியா
X
ஆகஸ்டு மாதத்தில் ரூ.1 லட்சத்து 43 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வருவாய்
Byமாலை மலர்2 Sept 2022 8:27 AM IST
- கடந்த ஆண்டின் ஆகஸ்டு மாத வருவாயுடன் ஒப்பிடுகையில் இது 28 சதவீதம் அதிகம்.
- பொருளாதாரம் மீண்டு வருவதையும், வரி செலுத்துவோர் அதிகரித்து இருப்பதையும் இந்த வசூல் காட்டுவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
கடந்த ஆகஸ்டு மாதத்தில் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 612 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டின் ஆகஸ்டு மாத வருவாயுடன் ஒப்பிடுகையில் இது 28 சதவீதம் அதிகம் ஆகும். தொடர்ந்து 6 மாதங்களாக ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடிக்கு மேல் கிடைத்து வருகிறது.
பொருளாதாரம் மீண்டு வருவதையும், வரி செலுத்துவோர் அதிகரித்து இருப்பதையும் இந்த வசூல் காட்டுவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Next Story
×
X