என் மலர்
இந்தியா
போர்க்கள பகுதி போன்று காட்சியளித்த பாலசோர் மாவட்ட மருத்துவமனை
- நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்ததால் மருத்துவமனையில் கூட்டம் அலைமோதல்
- 2000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த பயணிகளுக்கு உதவி முன்வந்தனர்
ஒடிசாவில் நடைபெற்ற ரெயில் விபத்து பாலசோர் மாவட்டத்திற்கு உட்பட்ட பஹனாகா பகுதியில் நடைபெற்றது. இதனால் காயம் அடைந்த 900-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குறிப்பாக பாலசோர் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
விபத்து குறித்து அறிந்ததும் மருத்துவமனை நிர்வாகிகள் படுக்கை எண்ணிக்கைகளை அதிரிகத்தனர். இருந்தாலும் ஒரே நேரத்தில் ரத்தம் சொட்ட சொட்ட, கை கால்கள் இழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதால் மருத்துவமனை போர்க்கள பகுதி போன்று காட்சியளித்தது.
மேலும், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலத்தை சேர்ந்தவர்கள் பயணம் செய்ததால் மொழி தெரியாத காரணத்தினால் மருத்துவ உதவி செய்வதில் கம்யூனிகேசன் பிரச்சினை ஏற்பட்டது.
இந்த அனுபவம் குறித்து மருத்துவமனையின் கூடுதல் மாவட்ட மருத்துவ அதிகாரி மிருதுன்ஜாய் மிஷ்ரா கூறியதாவது ''நான் பல ஆண்டுகளாக வேலை பார்த்திருக்கிறேன். எனது வாழ்நாளில் இதுபோன்ற பரபரப்பான, அலறல் சத்தத்துடன் கூடிய நிகழ்வை பார்த்தது கிடையாது.
திடீரென 251 பேர் காயத்துடன் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டனர். போதுமான படுக்கைகள் இல்லை. மருத்துவ ஊழியரகள் இரவு பகலாக முதலுதவி அளித்தனர். ஐந்தாறு பயணிகளை பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்தோம். தற்போது 60 பயணிகள் படுக்கையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிறு காயம் அடைந்தவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். உதவி செய்த அனைவருக்கும் நன்றி. இது வாழ்நாள் அனுபவமாக இருக்கும். தற்போது எல்லாம் சகஜ நிலைக்கு வந்துள்ளது.
பாலசோர் மருத்துவமனைக்கு முன்பு சுமார் 2000 பேர் கூடினர். அவர்கள் காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்ததுடன், ரத்த தானமும் வழங்கினர்.