search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய பட்ஜெட்டில் பீகாருக்கு எதுவுமே கிடைக்கவில்லை - தேஜஸ்வி அதிருப்தி
    X

    மத்திய பட்ஜெட்டில் பீகாருக்கு எதுவுமே கிடைக்கவில்லை - தேஜஸ்வி அதிருப்தி

    • பீகார் மீதான மாற்றாந்தாய் மனப்பான்மை . இந்த பட்ஜெட் ஒரு ஏமாற்று வித்தை.
    • அவை வெறும் ஜூம்லேபாசி [வாய்மாலம்] என்று தெரிவித்தார்.

    பாராளுமன்றத்தில் 2025- 26ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வருடம் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் பட்ஜெட்டில் அம்மாநிலத்துக்கு அதிக சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

    பீகாரில் தேசிய உணவு தொழில்நுட்ப கல்வி மையம், 4 புதிய பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்படும் உள்ளிட்ட 7 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் பீகாருக்கு எதுவமே கிடைக்கவில்லை என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார்.

    பீகாருக்கு எதுவும் கிடைக்கவில்லை. அனைவரும் சிறப்புப் பொருளாதார தொகுப்புகள் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்தோம். ஆனால், என்ன கிடைத்தது? இது பீகார் மீதான மாற்றாந்தாய் மனப்பான்மை. இந்த பட்ஜெட் ஒரு ஏமாற்று வித்தை. இன்றைய பட்ஜெட் பீகாருக்கு அநீதியானது. கடந்த பட்ஜெட்டில் கூறப்பட்ட அதே பழைய அறிவிப்புகள் தான் தற்போதும் வந்துள்ளது.

    ரெயில் கட்டணம் தினமும் அதிகரித்து வருகிறது. ஆனால், ரயில் பயணக் கட்டணத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு முற்றிலும் தவறிவிட்டது. மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை முதல்வர் ஏற்கனவே கைவிட்டதாக தெரிகிறது.

    பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு வார்த்தை கூட அதுகுறித்து பேசவில்லை. வஞ்சிக்கப்படும் ஏழை மாநிலத்திற்கு சிறப்பு பொருளாதார தொகுப்பு இல்லை, ஆனால் பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் அரசு அனைத்து நல்ல காரியங்களையும் செய்து வருகிறது.

    பீகாருக்கான புதிய விமான நிலையங்கள் அமைப்பது போன்ற அறிவிப்புகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த தேஜஸ்வி யாதவ், அவை வெறும் ஜூம்லேபாசி [வாய்மாலம்] என்று தெரிவித்தார்.

    இவையெல்லாம் பழைய விஷயங்கள், . பாட்னாவின் புறநகரில் உள்ள பிஹ்தாவில் புதிய விமான நிலையம் போன்ற திட்டங்களில் மத்திய அரசு ஏன் மவுனம் காக்கிறது? நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, அதற்காக நிலத்தை கையகப்படுத்தி விமான நிலையங்களுக்கு ஒப்படைத்தோம் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×