என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![பிஜு பட்நாயக் பெயரில் வழங்கப்பட்ட விருதின் பெயரை மாற்றியது ஒடிசா அரசு பிஜு பட்நாயக் பெயரில் வழங்கப்பட்ட விருதின் பெயரை மாற்றியது ஒடிசா அரசு](https://media.maalaimalar.com/h-upload/2024/07/20/3450986-award.webp)
பிஜு பட்நாயக் பெயரில் வழங்கப்பட்ட விருதின் பெயரை மாற்றியது ஒடிசா அரசு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஒடிசா விளையாட்டு மற்றும் இளைஞர் சேவைகள் துறையால் தொடங்கப்பட்டது பிஜு பட்நாயக் விருது.
- முன்னாள் முதல் மந்திரி பிஜு பட்நாயக் சேவையை நினைவுகூரும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.
புவனேஸ்வர்:
ஒடிசாவின் விளையாட்டு மற்றும் இளைஞர் சேவைகள் துறையால் தொடங்கப்பட்டது பிஜு பட்நாயக் துணிச்சலான விருது. இது ஒடிசா மக்கள் நிகழ்த்திய அற்புதமான துணிச்சலான செயல்களை அங்கீகரிக்கிறது.
ஒடிசாவின் முன்னாள் முதல் மந்திரி மறைந்த பிஜு பட்நாயக்கின் சேவையை நினைவுகூரும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அவர் தனது வாழ்நாளில் இந்திய இளைஞர்களை ஊக்குவிக்கும் பல துணிச்சலான செயல்களை வெளிப்படுத்தினார்.
பிஜு பட்நாயக் விருது ஆண்டுதோறும் மிகச்சிறந்த துணிச்சலான செயலுக்காக வழங்கப்படுகிறது.
இந்நிலையில், விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் பிஜு பட்நாயக் விருது இனி ஒடிசா ராஜ்ய கிரிடா சம்மான் விருது என்ற பெயரில் வழங்கப்படும் என ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த விருதுக்கான பரிசுத்தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வாழ்நாள் சாதனையாளருக்கான விருதுக்காக ரூ.3 லட்சம், சிறந்த வீரருக்கான விருதுக்கு ரூ. 2லட்சம் மற்றும் சிறந்த பயிற்சியாளருக்கான விருதுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.