search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பதிவான வாக்குகளில் 10% வரை பாஜகவால் முறைகேடு செய்ய முடியும்: கெஜ்ரிவால் பகீர் குற்றச்சாட்டு
    X

    பதிவான வாக்குகளில் 10% வரை பாஜகவால் முறைகேடு செய்ய முடியும்: கெஜ்ரிவால் பகீர் குற்றச்சாட்டு

    • வாக்கு எந்திரங்களில் பதிவான 10 சதவீத வாக்குகளை வேறுபடுத்தி காட்ட முடியும் என்பதை ஆதாரங்கள் மூலம் தெரிந்திருக்கிறேன்.
    • நாம் 15 சதவீதம் வாக்குகள் முன்னிலை பெற்றால், 5 சதவீதம் வாக்குகளில் வெற்றி பெறுவோம்.

    டெல்லி மாநில சட்டசபை தேர்தல் நாளைமறுதினம் நடைபெறுகிறது. இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.

    இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தேசிய தலைவர் கெஜ்ரிவால் இன்று டெல்லி மக்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    வாக்கு எந்திரங்களில் பதிவான 10 சதவீத வாக்குகளை வேறுபடுத்தி காட்ட முடியும் என்பதை ஆதாரங்கள் மூலம் தெரிந்திருக்கிறேன் என்பதை டெல்லி மக்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மிகப்பெரிய அளவில் வாக்குகள் பதிவாக, ஒவ்வொரு வாக்குகளும் ஆம் ஆத்மிக்கு செல்ல வேண்டும்.

    ஆகவே, நாம் 15 சதவீதம் வாக்குகள் முன்னிலை பெற்றால், 5 சதவீதம் வாக்குகளில் வெற்றி பெறுவோம்.

    எல்லா இடங்களிலும் 10 சதவீதத்திற்கு மேல் முன்னிலை பெற வேண்டும். இது மட்டுமே இயந்திரங்களை எதிர்கொள்ள ஒரரேவழி. அதனால் நீங்கள் மிகப்பெரிய அளவில் வாக்களிக்க வேண்டும். முன்னெச்சரிச்சை நடவடிக்கையாக நாம் இணையதளம் உருவாக்கியுள்ளோம்.

    மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்களில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டோம். அதனடிப்படையில் பிப்ரவரி 5-ந்தேதி ஒவ்வொரு வாக்குச்சாவடியின் 6 விவரங்களை அப்லோடு செய்ய இருக்கிறோம். இந்த புள்ளி விவரங்களோடு எந்திரங்கள் முறைகேட்டில் ஈடுபட முடியாது. வாக்கு எண்ணிக்கை நாளில் ஏதேனும் முறண்பாடு ஏற்பட்டால், இந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடலாம்.

    இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×