என் மலர்
இந்தியா
பிப்ரவரி 8-ந்தேதி உறுதியாக தாமரை மலரும்: கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சொல்கிறார்
- தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக ஆட்சி அமைக்கும் என வெளியீடு.
- கருத்து கணிப்பின்படி முடிவு அமைந்தால் 27 வருடத்திற்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கும்.
டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
மாலை 6 மணி வரை வாக்கு மையம் வந்தடைந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. பதிவான மொத்த வாக்கு சதவீதம் இன்றிரவு அல்லது நாளை காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இந்த நிலையில்தான் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தையை கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 27 வருடங்கள் கழித்து டெல்லியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கருத்து கணிப்பு குறித்து புது டெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா கூறுகையில் "பிப்ரவரி 8-ந்தேதி உறுதியாக டெல்லியில் தாமரை மலரும். நாங்கள் சிறந்த ஆட்சியை வழங்குவோம். யமுனை ஆறு சுத்தம் செய்யப்படும். வேலைவாய்ப்பு வழங்கப்படும். அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியடைந்து கொண்டிருக்கிறார் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்" என்றார்.