என் மலர்
இந்தியா
பாஜக கவனத்தை சிதறடிப்பதில் ஈடுபடுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
- பாஜக- ஆர்எஸ்எஸ் சிந்தனை அரசியலமைப்பிற்கு எதிரானது, அம்பேத்கருக்கு எதிரானது.
- அம்பேத்கர் குறித்த கருத்துக்களுக்கு அமித ஷா மன்னிப்பு கேட்டு ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
பாராளுமன்ற நுழைவாயிலில் இன்று நடைபெற்று தள்ளுமுள்ளு தொடர்பாக ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:-
ராகுல் காந்தி கூறியதாவது:-
பாஜக- ஆர்எஸ்எஸ் சிந்தனை அரசியலமைப்பிற்கு எதிரானது, அம்பேத்கருக்கு எதிரானது
பாஜக கவனத்தை சிதறடிப்பதில் ஈடுபடுகிறது. அம்பேத்கர் குறித்த கருத்துக்களுக்கு அமித ஷா மன்னிப்பு கேட்டு ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-
* அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதற்கு நான் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
* அமித் ஷாவை நீக்க வேபண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்தோம். இது நடைபெறாது என்பது எங்களுக்கு தெரியும். அதனால் போராட்டத்தை கையில் எடுத்தோம்.
* அம்பேத்கர் குறித்து அமித் ஷா அவமதிப்பாக பேசிய விவகாரத்தை திசைதிருப்ப பா.ஜ.க. விரும்புகிறது. அதனால் மற்ற விசயங்கள் குறித்து குரல் எழுப்புகின்றனர்.
* நாங்கள் பாராளுமன்றத்திற்குள் நுழைவதை பா.ஜ.க. எம்.பி.க்கள் தடுத்தனர். அவர்கள் என்னை தள்ளி விட்டனர். நான் நிலைதடுமாறி கீழே உட்கார்ந்தேன்.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.