search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆம் ஆத்மி வாக்காளர்களின் பெயர்களை நீக்க தேர்தல் ஆணையத்தில் காய் நகர்த்திய பாஜக - கெஜ்ரிவால்
    X

    'ஆம் ஆத்மி வாக்காளர்களின் பெயர்களை நீக்க தேர்தல் ஆணையத்தில் காய் நகர்த்திய பாஜக' - கெஜ்ரிவால்

    • முந்தைய தேர்தலில் ஆம் ஆத்மி சுமார் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஷாஹ்தரா தொகுதியில் 11,000 வாக்காளர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர்
    • ஆயிரக்கணக்கான வாக்காளர் பதிவுகளை நீக்குவதற்கு பாஜக இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளது.

    டெல்லியில் அடுத்த வருட தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது, இந்நிலையில் தேர்தலுக்கு முன்பு டெல்லி வாக்காளர் பட்டியலிலிருந்து ஏராளமான வாக்காளர்களை நீக்க பாஜக முயல்வதாக ஆம் ஆத்மி கட்சி பொதுச்செயலாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

    இன்று [வெள்ளிக்கிழமை] செய்தியாளர் சந்திப்பில் பேசிய கேஜ்ரிவால், ஷஹ்தாரா, ஜனக்புரி மற்றும் லக்ஷ்மி நகர் உள்ளிட்ட பல தொகுதிகளில் ஆயிரக்கணக்கான வாக்காளர் பதிவுகளை நீக்குவதற்கு பாஜக இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளது.

    ஷாஹ்தாரா பகுதியில் உள்ள 11,018 வாக்காளர்களின் பெயர்களை நீக்க பாஜக விண்ணப்பித்துள்ளது, ஆனால் அதில் உள்ள 500 பெயர்களில் நாங்கள் ஆராய்ந்தபோது , அதில் இன்னும் 75 சதவீதம் பேர் அங்குதான் வசிக்கிறார்கள். ஆனால் அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க முயற்சி நடக்கிறது,

    முந்தைய தேர்தலில் ஆம் ஆத்மி சுமார் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஷாஹ்தரா தொகுதியில் ஏறக்குறைய 11,000 வாக்காளர்கள் பட்டியலிலிருந்து அகற்றப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் பெரும்பாலானோர் ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் என்று அவர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

    தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையோடு தொடர்புடைய அனைத்து விண்ணப்பங்களையும் அதன் இணையதளத்தில் வெளியிடுமாறு கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

    Next Story
    ×