search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முன்னாள் முதல் மந்திரி மகன் உள்பட 29 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.
    X

    முன்னாள் முதல் மந்திரி மகன் உள்பட 29 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.

    • டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
    • தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 8ம் தேதி எண்ணப்பட உள்ளன.

    புதுடெல்லி:

    டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சி நடந்துவருகிறது. அதிஷி முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

    மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அன்று பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிடுகின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

    இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலில் 29 பேர் இடம்பெற்றுள்ளனர்.

    இதில் டெல்லியின் முன்னாள் முதல் மந்திரியான மதன் லால் குரானாவின் மகன் ஹரிஷ் குரானா மோதி நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். பா.ஜ.க. மூத்த தலைவர் கபில் மிஸ்ரா டெல்லியின் கர்வால் நகர் தொகுதியில் களமிறங்குகிறார்.

    சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த பிரியங்கா கவுதம் கொண்ட்லி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே 29 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×