என் மலர்
இந்தியா
பாஜக சொல்லும் கெஜ்ரிவால் மாளிகை.. பார்க்க சென்ற ஆம் ஆத்மி தலைவர்கள் தடுத்து நிறுத்தம்!
- உள்ளே தங்க முலாம் பூசப்பட்ட 13 கழிவறைகள் உள்ளதாகவும் பாஜக கூறுகிறது.
- கெஜ்ரிவால் வீட்டை காலி செய்தபோதே அங்கு நிறுவப்பட்ட ஆடம்பர வசதிகள் மாயமானதாக பாஜக கூறியுள்ளது.
டெல்லி சட்டமன்றத் தேர்தல் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக- ஆம் ஆத்மி- காங்கிரஸ் தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளது.
ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வர் இல்லத்தில் 33 கோடி வரை செலவு செய்து ஆடம்பர வசதிகளை செய்துகொண்டதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது.
உள்ளே தங்க முலாம் பூசப்பட்ட 13 கழிவறைகள் உள்ளதாகவும் பாஜக கூறுகிறது. பிரதமர் மோடி வரை இந்த தேர்தலில் பிரதான பிரசாரமாக 'ஷீஷ் மகால் - சொகுசு மாளிகை' என்பதை பாஜக முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில் பாஜகவின் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என கெஜ்ரிவால் மறுத்துள்ளார். கடந்த வருடம் செப்டம்பரில் அவர் முதல்வர் பதவி விலகியபோது அந்த வீட்டில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் பாஜக கூறும் இந்த ஷீஷ் மகால் வீட்டில் அவர்கள் கூறுவதுபோல் எதுவும் இல்லை என்றும் அதை நிரூபிக்க பத்திரிகையாளர்களுடன் அந்த வீட்டில் ஹோம் டூர் செய்யப் போவதாக ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் நேற்று பாஜகவிற்கு பகிரங்கமாகச் சவால் விடுத்தார்.
அதன்படி, இன்று ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் சவுரப் பரத்வாஜ் மற்றும் சஞ்சய் சிங் ஆகியோர் பத்திரிகையாளர்களுடன் அந்த அரசு இல்லத்திற்குள் நுழைய முயன்றனர்.
ஆனால் போலீஸ் அவர்களை தடுத்து நிறுத்திடயது. எனவே அவர்கள் ஆம் ஆத்மி தொண்டர்களுடன் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
#WATCH | Delhi Minister Saurabh Bharadwaj and AAP MP Sanjay Singh sit on a 'dharna' outside the CM's residence after being denied entry by the Police. Yesterday, Sanjay Singh challenged BJP to visit the CM's residence along with media personnel, amid the BJP's 'sheesh mahal'… https://t.co/zZdITLY7eC pic.twitter.com/OV9MbsaIz6
— ANI (@ANI) January 8, 2025
அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பிய சஞ்சய் சிங், நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல. நாங்கள் ஏன் நிறுத்தப்படுகிறோம்? என்றும் இதன்மூலம் பாஜகவின் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் மற்றும் பொய்களின் அடிப்படையிலானவை என்று நிரூபணமானதாகத் தெரிவித்தார்.
ஷீஷ் மகாலை பார்வையிட்ட பின் பிரதமரின் ராஜ் மகால் வீட்டை பார்வையிட பாஜக தயாரா என்றும் சஞ்சய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். கெஜ்ரிவால் வீட்டை காலி செய்தபோதே அங்கு நிறுவப்பட்ட ஆடம்பர வசதிகள் மாயமானதாக பாஜக கூறியுள்ளது.