என் மலர்
இந்தியா
பட்ஜெட் 2024 - தனிநபர் வருமான வரி, உச்சவரம்பில் மாற்றம் இல்லை
- 2024-25க்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்தார்
- புதிய அரசு பொறுப்பேற்றதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்
இவ்வருடம் ஏப்ரல்-மே மாதத்தில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 2024க்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்ததாவது:
மத்திய பட்ஜெட்டில் தனிநபர்களுக்கான வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.
வருமான வரி உச்ச வரம்பிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
கடந்த வருடம் கொண்டு வரப்பட்ட வழிமுறைகளே தற்போது தொடரும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
பொருளாதார ரீதியாக மத்திய தரம் என வகைப்படுத்தப்பட்ட குடும்பங்களில் பெரும்பாலானவர்களுக்கு எதிர்பார்ப்பு தனி நபர் வருமானவரியில் சலுகைகள்தான்.
ஆனால், கடந்த முறை கொண்டு வரப்பட்ட "ஓல்டு ரெஜிம், நியூ ரெஜிம்" எனும் இரண்டு திட்டங்கள் தொடர்ந்து நடைபெறப்படும் என்பது தற்போது தெளிவாகி உள்ளது.