search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவை பாரத் என்றுதான் அழைக்க வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் சர்ச்சை பேச்சு
    X

    இந்தியாவை 'பாரத்' என்றுதான் அழைக்க வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் சர்ச்சை பேச்சு

    • 2024 மக்களவை தேர்தலின்போது எதிர்கட்சிகள் தங்களது கூட்டணி பெயரை இந்தியா என்று வைத்தனர்.
    • கடந்த மக்களவை தேர்தலின் போது இந்தியா Vs பாரத் என்ற சர்ச்சை வெடித்தது

    நம்முடைய நாட்டின் பெயரை இந்தியா என்று கூறக்கூடாது 'பாரத்' என்றுதான் அழைக்கவேண்டும் என ஆர்.எஸ்.எஸ் பொது செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    டெல்லியில் நடைபெற்ற விழாவில் பேசிய தத்தாத்ரேய ஹோசபாலே, "நம்முடைய நாட்டின் பெயர் பாரத். நாம் அப்படி தான் அழைக்கவேண்டும். இந்தியா என்பது ஆங்கில பெயர்.

    நம்முடைய நாட்டின் பெயர் பாரத் என்றால், இந்திய அரசியலமைப்பு, இந்திய ரிசர்வ் வங்கி போன்ற நிறுவனங்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் போது வழங்கப்பட்ட காலனித்துவப் பெயரான 'இந்தியா'வை இன்னும் ஏன் பயன்படுத்துகின்றன. இதை நாம் பாரத் என்று மாற்றம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

    2024 மக்களவை தேர்தலின்போது எதிர்கட்சிகள் தங்களது கூட்டணி பெயரை இந்தியா என்று வைத்தனர். இதனையடுத்து இந்தியா Vs பாரத் என்ற சர்ச்சை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×