என் மலர்
இந்தியா
இஸ்ரேலுக்கு இந்தியாவில் இருந்து ஆயுதங்கள் அனுப்புவதை தடுக்க முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
- இஸ்ரேலுக்கு இந்தியாவிலிருந்து ஆயுதங்களையும் ராணுவ உபகரணங்களையும் ஏற்றுமதி செய்ய தடை விதித்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
- இந்திய நிறுவனங்களுக்குத் தடை விதித்தால் அது இஸ்ரேலுடனான அவர்களின் ஒப்பந்தத்தை மீறியதாகிவிடும்.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 40,000 க்கும் அதிகமாக மக்கள் உயிரிழந்துள்ளனர். போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து வரும் அமரிக்கா அதே வேளையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்களை வழங்கி வருகிறது.
இந்நிலையில் காசா போருக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு இந்தியாவிலிருந்து ஆயுதங்களையும் ராணுவ உபகரணங்களையும் ஏற்றுமதி செய்ய தடை விதித்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் மற்றும் நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்ய இந்திய நிறுவனங்களுக்குத் தடை விதித்தால் அது இஸ்ரேலுடனான அவர்களின் ஒப்பந்தத்தை மீறியதாகிவிடும். நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளில் நாங்கள் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். முன்னதாக காசா மீது இஸ்ரேல் ஏவிய குண்டுகளில் இந்திய நிறுவனங்களின் தயாரிப்பு குறியீடுகள் இருப்பதாக கூறப்பட்டது சர்ச்சையானது.