search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திடீர் சோதனையில் விதிமீறல்கள் அம்பலம்.. பள்ளிகளுக்கு நோட்டீஸ் கொடுத்த சி.பி.எஸ்.இ.
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    திடீர் சோதனையில் விதிமீறல்கள் அம்பலம்.. பள்ளிகளுக்கு நோட்டீஸ் கொடுத்த சி.பி.எஸ்.இ.

    • கடந்த மாதம் டெல்லி, பெங்களூரு, பாட்னா, பிலாஸ்பூர், வாரணாசி, அகமதாபாத் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டது.
    • ஒவ்வொரு பள்ளிக்கும் அந்தந்த ஆய்வு அறிக்கையின் நகல் வழங்கப்பட்டுள்ளது.

    சி.பி.எஸ்.இ.யின் விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறியதற்காக நாடுமுழுவதும் உள்ள 29 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    கடந்த மாதம் டெல்லி, பெங்களூரு, பாட்னா, பிலாஸ்பூர், வாரணாசி, அகமதாபாத் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் திடீரென ஆய்வுகள் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுகளில் பெரும்பாலான பள்ளிகள் சி.பி.எஸ்.சி இணைப்பு துணை சட்டங்களை மீறியிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்ட 29 பள்ளிகளுக்கும் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் அந்தந்த ஆய்வு அறிக்கையின் நகல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 30 நாட்களுக்குள் தங்கள் பதில்களைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சேர்க்கை முறைகேடுகள், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு விதிமுறைகளை பின்பற்றாதது உள்ளிட்டவை குறித்து ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி, ரிச்மண்ட் குளோபல் பள்ளி (டெல்லி), நாராயண ஒலிம்பியாட் பள்ளி (பெங்களுரூ), நவீன கல்வி அகாடமி (சத்தீஸ்கர்), ராஜ் ஆங்கில பள்ளி (உத்தரபிரதேசம்) உள்ளிட்ட 29 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    Next Story
    ×