என் மலர்
இந்தியா
X
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?: சி.பி.எஸ்.இ. அறிவிப்பு
Byமாலை மலர்12 Dec 2023 6:21 PM IST
- எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு பிப்ரவரி 15-ம் தேதி பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது.
- 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பிப்ரவரி 15-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரை நடக்க உள்ளது..
புதுடெல்லி:
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு எப்போது என்ற எதிர்பார்ப்பு அந்த தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் இருந்து வந்தது.
அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சி.பி.எஸ்.இ. நிர்வாகம் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், பிளஸ்-2 மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி ஏப்ரல் 2-ம் தேதி வரை தேர்வு நடக்க உள்ளது.
10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி முதல் மார்ச் மாதம் 13-ம் தேதி வரையும் தேர்வு நடைபெற உள்ளது.
Next Story
×
X