search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை- லைவ் அப்டேட்ஸ்
    X
    LIVE

    தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை- லைவ் அப்டேட்ஸ்

    • நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6-வது முறையாக பட்ஜெட் தாக்கல்.
    • இடைக்கால பட்ஜெட் என்பதால் மென்மையான பட்ஜெட்டாக இருக்க வாய்ப்பு.

    விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. இடைக்கால பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறுகையில் "தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தல் முடிவடைந்த பின் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வோம்" எனத் தெரிவித்தார்.

    இதன்மூலம் 3-வது முறையாக தொடர்ந்து பிரதமராக தேர்வு செய்யப்படுவேன் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

    Live Updates

    • 1 Feb 2024 11:59 AM IST

      மறைமுக வரிகளிலும் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

    • 1 Feb 2024 11:58 AM IST

      ரூ.7 லட்சம் வரையிலான தனிநபர் வருமானத்திற்கு வரி செலுத்த தேவையில்லை என்பது தொடரும்.

    • 1 Feb 2024 11:58 AM IST

      தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை.

    • 1 Feb 2024 11:57 AM IST

      வரிமான வரி தாக்கல் செய்வது எளிதாக்கப்பட உள்ளது.

    • 1 Feb 2024 11:56 AM IST

      மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் சராசரியாக ரூ.1.66 லட்சம் கோடியை கடந்துள்ளது.

    • 1 Feb 2024 11:55 AM IST

      ஏற்கனவே ரூ.7 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    • 1 Feb 2024 11:55 AM IST

      நாட்டு மக்களின் சராசரி வருமானம் அதிகரித்துள்ளது.

    • 1 Feb 2024 11:55 AM IST

      கடந்த சில ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

    • 1 Feb 2024 11:53 AM IST

      நடப்பாண்டு மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் உதவி வழங்க இலக்கு 1.3 லட்சம் கோடி.

    • 1 Feb 2024 11:52 AM IST

      நிதி பற்றாக்குறை எதிர்வரும் ஆண்டில் ஜிடிபியில் 5.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×