search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    47 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றம்.. இந்திரா பவன் கட்டிடத்தை திறந்து வைத்தார் சோனியா காந்தி
    X

    47 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றம்.. "இந்திரா பவன்" கட்டிடத்தை திறந்து வைத்தார் சோனியா காந்தி

    • லோக்சபா மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்கள் என மொத்தம் 400க்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்துக் கொண்டனர்.
    • இது புதிய முயற்சிக்கும், புதிய முன்னேற்றத்திற்கான தருணம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    வளர்ந்து வரும் காலத்திற்கு ஏற்பவும், எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டும், பல்வேறு நிர்வாக வசதிக்காகவும் கடந்த 40 ஆண்டுகளாக டெல்லி அக்பர் சாலையில் இயங்கி வந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் கோட்லா சாலையில் உள்ள இந்திரா பவனுக்கு மாற்றப்படுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    அதன்படி, இந்திரா பவன் என பெயரிடப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று திறந்து வைத்தார்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி எம்.பி., வதேரா மற்றும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், நாடெங்கிலும் உள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்

    லோக்சபா மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்கள் என மொத்தம் 400க்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்துக் கொண்டனர்.

    கடந்த 47 ஆண்டுகளாக 24, அக்பர் சாலை வளாகத்தில் செயல்பட்டு வரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி, தற்போது புதிய முகவரிக்கு மாறி உள்ளது. இது வரலாற்றில் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது.

    Next Story
    ×