என் மலர்
இந்தியா

டெல்லி வளர்ச்சிக்காக ரேகா குப்தா முழு வீச்சுடன் பாடுபடுவார்: பிரதமர் மோடி

- டெல்லி முதல்வராக ரேகா குப்தா இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
- டெல்லி பெண் முதல்வராக பதவி ஏற்ற 4-வது நபர் இவர் ஆவார்.
டெல்லி மாநில முதல்வராக ரேகா குப்தா இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் பர்வேஷ் சாகிப் சிங் வர்மா, கபில் மிஷ்ரா, ரவீந்தர் இந்திரஜ் சிங், மன்ஜிந்தர் சிங் சிர்சா, பங்கஜ் குமார் சிங், ஆஷிஷ் சூட் ஆகிய 6 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். துணைநிலை ஆளுநர் சக்சேனா இவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ரேகா குப்தா பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, ஆந்திர பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் டெல்லி மக்கள் வளர்ச்சிக்காக ரேகா குப்தா முழு வீச்சில் பாடுபடுவார் என்ற நம்பிக்கை உள்ளது என பிதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-
ரேகா குப்தா அடிமட்ட பொறுப்புகளில் இருந்து வளர்ந்து வந்தவர். கல்லூரி அரசியல், மாநில அமைப்பு, மாநகராட்சி நிர்வாகம் போன்ற பதவிகள் வகித்த நிலையில், தற்போது எம்எல்ஏ- ஆகி முதல்வராகியுள்ளார்.
டெல்லி வளர்ச்சிக்காக முழு வீச்சில் பாடுபடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவரது பதவிக்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.