என் மலர்
இந்தியா

1995-ல் ரேகா குப்தா உடன் பதவி ஏற்ற போட்டோவை பகிர்ந்த காங்கிரஸ் தலைவர்

- டெல்லி மாநில முதல்வராக ரேகா குப்தா இன்று பதவி ஏற்க உள்ளார்.
- 1995-ல் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்ற படத்தை பகிர்ந்துள்ளார்.
டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 8-ந்தேதி முடிவுகள் வெளியானாலும் நேற்று இரவுதான் முதல்வர் யார் என்பதை பாஜக அறிவித்தது. ரேகா குப்தா என்ற பெண் எம்.எல்.ஏ.-வை முதல்வராக அறிவித்துள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் பதவி ஏற்க உள்ளார்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா, ரேகா குப்தா உடன் 1995-ஆம் ஆண்டு ஒன்றாக பதவி ஏற்ற படத்தை பகிர்ந்துள்ளார். இந்த படம் வைரலாக பரவி வருகிறது.
அல்கா லம்பா
எக்ஸ் பக்கத்தில் போட்டோவை பகிர்ந்த அல்கா லம்பா "1995-ம் ஆண்டு நானும், ரேகா குப்தாவும் இணைந்து பதவி ஏற்றபோது எடுத்த மறக்க முடியாத போட்டோ. டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தலைவர் பதவிக்கு என்.எஸ்.யு.ஐ. சார்பில் போட்டியிட்டு நான் வெற்றி பெற்றேன். அவர் பொதுச் செயலாளர் பதவிக்கு ஏபிவிபி சார்பில் வெற்றி பெற்றார். வாழ்த்துகள்.
4-வது பெண் முதல்வரை பெற இருக்கும் டெல்லிக்கு வாழ்த்துகள். யமுனை தூய்மைப்படுத்தப்படும், குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
பின்னர் 1996-ஆம் ஆண்டு ரேகா குப்தா டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தலைவராக தேர்வு பெற்றார்.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷியை எதிர்த்து அல்கா லம்பா போட்டியிட்டு தோல்வியடைந்தார்.