search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சோனியா, ராகுல் காந்தி கருத்து துரதிருஷ்டவசமானது: ஜனாதிபதி மாளிகை
    X

    சோனியா, ராகுல் காந்தி கருத்து துரதிருஷ்டவசமானது: ஜனாதிபதி மாளிகை

    • ஜனாதிபதி மிகவும் சோர்வடைந்தார். அவரால் பேச முடியவில்லை, பாவம் என சோனியா காந்தி கருத்து.
    • ஜனாதிபதியின் உரை போரடிக்கிறது. வேறு கருத்துகள் இல்லையா? என ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தார்.

    2025-26 நிதியாண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடா் என்பதால் தொடக்க நாளான இன்று பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

    அப்போது பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மத்திய அரசின் முதன்மையான நோக்கம். தேசிய கல்வி கொள்கை மூலம் மாணவர்களுக்கு நவீன கல்வி முறை தயாராகி வருகிறது. 8-வது ஊதியக்குழு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என உரையாற்றினார்.

    ஜனாதிபதி உரை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியிடம் கேட்டதற்கு "ஜனாதிபதி மிகவும் சோர்வடைந்தார். அவரால் பேச முடியவில்லை, பாவம்" என குறிப்பிட்டார்.

    இதுதொடர்பாக, ராகுல் காந்தி கூறுகையில், ஜனாதிபதியின் உரை போரடிக்கிறது. வேறு கருத்துகள் இல்லையா? திரும்பத் திரும்ப அதையே சொல்கிறார்? என்றார்.

    ஜனாதிபதி உரை குறித்து சோனியா காந்தி கூறியது இழிவான கருத்து என பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் ஜனாதிபதி மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் "துரதிருஷ்டவசமானது. முற்றிலும் தவிர்க்கக்கூடியது. மோசமான சிந்தனை" எனத் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×