search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் - கடந்த ஆண்டில் தேசிய மகளிர் ஆணையத்தில் 31,000 புகார்கள்
    X

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் - கடந்த ஆண்டில் தேசிய மகளிர் ஆணையத்தில் 31,000 புகார்கள்

    • 2022-ம் ஆண்டில் தேசிய மகளிர் ஆணையத்தில் 31,000 புகார்கள் வந்துள்ளன.
    • 8 ஆண்டில் இல்லாத வகையில் 2022-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவாக வந்துள்ளன.

    புதுடெல்லி:

    தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடந்த 2022-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி 30, 957 புகார்கள் வந்துள்ளன. இந்த 30,957 புகார்களில் 9,710 புகார்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை என்ற அடிப்படையிலான பெண்களுக்கு எதிரான உணர்வுப்பூர்வ புகார்களுடன் தொடர்புடையவை.

    மேலும் 6,970 குடும்ப வன்முறை புகார்கள், 4,600 வரதட்சணை கொடுமை புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்களில் அதிக அளவாக 54.5 சதவீதம் அளவுக்கு (16,872) உத்தர பிரதேசத்தில் இருந்து வந்துள்ளன. அடுத்து டெல்லி (3,004), மகாராஷ்டிரா (1,381), பீகார் (1,368) மற்றும் அரியானா (1,362) ஆகியவை உள்ளன.

    தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடந்த 2014-ம் ஆண்டில் 33,906 புகார்கள் வந்துள்ளன. 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகளவாக 2022-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய புகார்கள் இங்கு வந்துள்ளன.

    பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் 2,523 புகார்களும், பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை முயற்சி தொடர்புடைய 1,701 புகார்களும், பெண்கள் புகார் அளிக்க வரும்போது அதனை போலீசார் அலட்சியம் செய்வது தொடர்புடைய 1,623 புகார்களும், சைபர் குற்றங்கள் தொடர்புடைய 924 புகார்களும் வந்துள்ளன என தகவல் தெரிவிக்கின்றது.

    கடந்த 2021-ம் ஆண்டில் தேசிய மகளிர் ஆணையத்திற்கு 30, 864 புகார்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×