என் மலர்
இந்தியா

பிரதமர் மோடியுடன் டெல்லி முதல்வர் ரேகா குப்தா சந்திப்பு!

- ஷாலிமார் பாக் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவான ரேகா குப்தா டெல்லி முதல்வராக பதவியேற்றார்.
- நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார்
தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மொத்தம் உள்ள 70 இடங்களில் 48 இடங்களை கைப்பற்றி பாஜக வெற்றி பெற்றது. 27 ஆண்டுகள் கழித்து டெல்லியில் பாஜக ஆட்சியமைத்துள்ள நிலையில் ஷாலிமார் பாக் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவான ரேகா குப்தா நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) டெல்லி முதல்வராக பதவியேற்றார்.
இதைத்தொடர்ந்து நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை ரேகா குப்தா நேரில் சென்று சந்தித்துள்ளார். பிரதமர் இல்லத்தில் அவர்களின் சந்திப்பு நிகழ்ந்தது.

பதவியேற்ற பிறகு அவர் பிரதமரைச் சந்திப்பது இதுவே முதல் முறை. குறிப்பாக டெல்லி பட்ஜெட் தாக்கலுக்கு முன் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. டெல்லி மேம்பாடு குறித்து இருவரும் பேசியிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.