என் மலர்
இந்தியா
4-வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராவார்- அதிஷி நம்பிக்கை
- டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.
- இது சாதாரண தேர்தல் அல்ல, நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டம்.
புதுடெல்லி:
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
இந்நிலையில் டெல்லி முதல்வரும், கல்காஜி தொகுதி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளருமான அதிஷி வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்தார்.
இது சாதாரண தேர்தல் அல்ல, நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டம். இந்த போராட்டத்தில் டெல்லி மக்கள் நல்லவர்கள், ஆம் ஆத்மி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருடன் நிற்பார்கள் என்று நான் நம்புகிறேன். அவர் நான்காவது முறையாக முதல்வராக வருவார் என்று கூறினார்.
#WATCH | Delhi CM Atishi and AAP candidate from Kalkaji, Atishi says, "This was not an ordinary election but a fight between good and evil. I am confident that the people of Delhi will stand with the good, AAP and Arvind Kejriwal. He will become the CM for the fourth time..." pic.twitter.com/Bv9UQLWNCB
— ANI (@ANI) February 8, 2025