என் மலர்
இந்தியா

ஆம் ஆத்மிக்கு அடுத்த அதிர்ச்சி: டெல்லியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. விலகல்

- டெல்லியில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
- தலைவர் கைது, முக்கிய அமைச்சரின் ராஜினாமா என ஆம் ஆத்மி ஆட்சி சிக்கலில் உள்ளது.
புதுடெல்லி:
டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவர் தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
ஜாமினில் வெளியே வந்த கெஜ்ரிவால், தனக்கு பதில் இளம் தலைவர் அதிஷியை முதல் மந்திரி ஆக்கினார்.
டெல்லியில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நான் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று குற்றமற்றவர் என நிரூபித்த பிறகு முதல் மந்திரி பதவியேற்பேன் என கெஜ்ரிவால் தெரிவித்தார்.
இதற்கிடையே, டெல்லி போக்குவரத்து அமைச்சராக இருந்த கைலாஷ் கெலாட் தனது பதவியை ராஜினாமா செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தலைவர் கைது, சிறைவாசம், கட்சியில் சலசலப்பு, முக்கிய அமைச்சரின் ராஜினாமா என அடுத்தடுத்து ஆம் ஆத்மி கட்சி ஆட்டம் கண்டு வருகிறது.
இந்நிலையில், சீலாம்புர் எம்.எல்.ஏ.வான அப்துல் ரகுமான் இன்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறது என குற்றம் சாட்டிய அப்துல் ரகுமான், இஸ்லாமிய மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.