என் மலர்
இந்தியா
விளக்குமாறால் ஆம் ஆத்மியை டெல்லி மக்கள் அகற்றுவார்கள் - அமித் ஷா
- இன்று பிரதமர் மோடி பிரசாரம் நிகழ உள்ளது.
- 'ஜாடு' (ஆம் ஆத்மியின் சின்னமான துடைப்பம்) மூலம் துடைத்தெறியப் போகிறார்கள்.
டெல்லியில் வரும் புதன்கிழமை [பிப்ரவரி 5] சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆளும் ஆம் ஆத்மி, மத்தியில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
நாளையுடன் தேர்தல் பிரசாரம் ஓயும் நிலையில் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று பிரதமர் மோடி பிரசாரம் நிகழ உள்ளது.
இதற்கிடையே நேற்று முஸ்தபாபாத் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மக்கள் இந்த முறை டெல்லியில் 3ஜி அரசாங்கம் நடத்தும் ஆம் ஆத்மி கட்சியை 'ஜாடு' (ஆம் ஆத்மியின் சின்னமான துடைப்பம்) மூலம் துடைத்தெறியப் போகிறார்கள்.
முதல் ஜி என்பது 'கொடலே வாலி சர்கார்' (ஊழல்களைச் செய்யும் அரசு), இரண்டாவது ஜி என்பது 'குஸ்பைதியோன் கோ பனா தேனே வாலி சர்க்கார்' (ஊடுருவுபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அரசு) மற்றும் மூன்றாவது ஜி என்பது 'கப்லே கர்னே வாலி சர்க்கார்' (ஊழலில் ஈடுபடும் அரசாங்கம்) என்று பேசியுள்ளார்.