என் மலர்
இந்தியா
விதிமீறலில் ஈடுபட்ட அதிபர் ஜோ பைடனின் பாதுகாப்பு வாகன ஓட்டுநர்
- அமெரிக்க அதிபர் பைடனின் பாதுகாப்பு வாகன ஓட்டுநர் விதிமீறலில் ஈடுபட்டார்.
- இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கலந்துகொண்டார். அவரின் பாதுகாப்பு வாகனங்களில் ஒரு கார் நேராக தாஜ் ஓட்டலுக்குள் நுழைந்துள்ளது.
அந்த ஓட்டலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சையத் அல் நஹியான் தங்கியிருந்துள்ளார். அந்தக் காரில் பல்வேறு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. உஷாரான பாதுகாப்பு அதிகாரிகள் கார் ஓட்டுநரை பிடித்து, விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது, கார் ஓட்டுநர் அவர்களிடம், ஜோ பைடன் தங்கியுள்ள ஐ.டி.சி. மவுரியாவுக்குச் செல்லவேண்டும் என கூறியுள்ளார். எனினும், தாஜ் ஓட்டலில் உள்ள லோதி எஸ்டேட் பகுதியில் இருந்து ஏற்றிச்சென்ற தொழில் அதிபரை திருப்பிக் கொண்டு வந்து விடவேண்டி இருந்தது. அதற்காக தாஜ் ஓட்டலுக்கு வந்தேன் என தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி நிரல் பற்றி அறிந்திருக்கவில்லை எனவும் கூறினார். விசாரணைக்கு பிறகு அதிகாரிகள் அவரை விடுவித்தனர்.