என் மலர்
இந்தியா
மும்பை, அகமதாபாத் உள்பட 7 இடங்களில் சோதனை: ரூ.13.5 கோடி பறிமுதல் செய்த அமலாக்கத்துறை
- மும்பை, அகமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
- பணப்பரிமாற்றங்கள் ஆன்லைன் வழியே நடந்த பின், பல்வேறு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளன.
மும்பை:
மாலேகான் பகுதியில் அமைந்த நாசிக் மெர்ச்சன்ட் கூட்டுறவு வங்கியுடன் (நம்கோ வங்கி) மற்றும் மகாராஷ்டிர வங்கி ஆகியவற்றில் பராமரிக்கப்பட்டு வந்த கணக்குகளின் வழியே நூற்றுக்கணக்கான கோடி அளவில் நடந்த பணப்பரிமாற்ற மோசடிகளை பற்றி அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்த வங்கிகளின் பெருமளவிலான தொகை, 21 தனிப்பட்ட நிறுவனங்களுக்கு முதலில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
பணப்பரிமாற்றங்கள் ஆன்லைன் வழியே நடந்த பின், பல்வேறு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளன என தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட மும்பை மண்டல அமலாக்கத்துறை தெரிவித்தது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை, குஜராத்தின் அகமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள 7 இடங்களில் அமலாக்கத் துறை நேற்று சோதனை நடத்தியது. அப்போது ரூ.13.5 கோடி கைப்பற்றப்பட்டது.
அகமதாபாத், மும்பை மற்றும் சூரத் நகரங்களில் உள்ள அங்காடியா மற்றும் ஹவாலா செயற்பாட்டாளர்களுக்கு இந்தப் பணம் சென்று சேர்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.