என் மலர்
இந்தியா

மராட்டியத்தில் தினசரி 8 விவசாயிகள் தற்கொலை: ஓரளவு உண்மைதான் என்கிறார் அமைச்சர்

- 2024 ஜனவரி 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை சத்ரபதி சம்பாஜிநகர் டிவிசனில் 952 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
- அகோலாவில் 168 விவசாயிகளும், வர்தாவில் 112 விவசாயிகளும், பீட் பகுதியில் 205 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 58 மாதங்களில் தினந்தோறும் 8 விவசாயிகள் உயிரிழந்தது ஓரளவிற்கு உண்மைதான் என நிவாரண மற்றும் மறுவாழ்வு அமைச்சர் மகரந்த் ஜாதவ்-பாட்டீல் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் என்.சி.பி. எம்.எல்.சி. சிவாஜிராவ் கார்ஜே கேள்வி நேரத்தின்போது இது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது சத்ரபதி சம்பாஜிநகர் மற்றும் அமராவதி டிவிசனில் விவசாயிகள் தற்கொலை அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அமைச்சர் வழங்கிய தரவுகளின்படி, கடந்த வருடம் மரத்வாடா டிவிசனில் 952 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அகோலாவில் 168 விவசாயிகளும், வர்தாவில் 112 விவசாயிகளும், பீட் பகுதியில் 205 விவசாயிகளும், அமராவதி டிவிசனில் 1,069 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர்.
2024 ஜனவரி 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை சத்ரபதி சம்பாஜிநகர் டிவிசனில் 952 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அவர்களில் 707 பேர் உதவி பெற தகுதியுடையவர்கள், 433 பேர் உதவி பெற்றவர்கள்.
பீட் பகுதியில் 167 பேர் உதவி பெற தகுதியானர்கள். 108 பேர் உதவி பெற்றவர்கள்.
அமராவதி டிவிசனில் 441 பேர் உதவி பெற தகுதியானவர்கள். 332 உதவிகள் பெற்றவர்கள்.
ஜால்னா மாவட்டத்தில் மந்தா தாலுகாவில் கடந்த 2023 ஏப்ரல் மாதம் முதல் 2024 செப்டம்பர் மாதம் வரை 13 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி அளிக்க உறுதிபூண்டுள்ளது என அமை்சசர் தெரிவித்துள்ளார்.