என் மலர்
இந்தியா
தேர்தல் விதிமீறல்: டெல்லி முதல்வர் அதிஷி மீது வழக்குப்பதிவு..
- ஆதரவாளர்கள் 50 முதல் 70 பேர், 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்றனர்
- பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரியும் அவரது குடும்பத்தினரும் வெளிப்படையாக விதிமுறைகளை மீறி வருகின்றனர்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த தேர்தலில் 10 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. நேற்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்துள்ள நிலையில் டெல்லி போலீஸ், விதிமீறல்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்நிலையில் கல்காஜி தொகுதியில் போட்டியிடும் டெல்லி முதல்வர் அதிஷி மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
டெல்லியில் நேற்று நேற்று இரவு கோவிந்தபுரி பகுதியில் முதல்வர் அதிஷியும் அவரது ஆதரவாளர்கள் 50 முதல் 70 பேர், 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் காணப்பட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கலைந்து செல்லுமாறு காவல்துறை அறிவுறுத்திய போதிலும், ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் காவலர்களை தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அதிஷி மீதும், காவல்துறையினரைத் தாக்கியதாக ஆம் ஆத்மியினர் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
@ceodelhioffice, @ECISVEEP @dmsoutheastdelhi, @CPDelhi, @AtishiAAP On 04/02/25, at 00:59 hrs, a gathering was reported at Baba Fateh Singh Marg, Govindpuri. HC Kaushal Pal responded & began videography. AAP members Ashmit & Sagar Mehta obstructed & assaulted him. pic.twitter.com/DxNYscIrlW
— DCP South East Delhi (@DCPSEastDelhi) February 4, 2025
இதுகுறித்து பேசிய அதிஷி, பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரியும் அவரது குடும்பத்தினரும் வெளிப்படையாக விதிமுறைகளை மீறி வருகின்றனர்.
அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நான் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தேன், ஆனால் என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தலைமை தேர்தல் அதிகாரி ராஜிவ் குமாரை குறிப்பிட்டு, அவர் எந்தளவுக்கு தேர்தல் செயல்முறையை கெடுப்பார் என்பதை நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று அதிஷி காட்டமாக தெரிவித்துள்ளார்.