என் மலர்
இந்தியா

X
அதிகாரத்தை அடைய ஆங்கிலம் ஒரு கருவி- காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி
By
மாலை மலர்20 Feb 2025 10:00 PM IST

- உ.பியில் மாணவர்கள் உடன் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
- ஆங்கிலம் கற்றுக் கொண்டால் உலகம் முழுக்க சென்று எந்தவொரு நிறுவனத்திலும் பணிபுரியலாம்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் மாணவர்கள் உடன் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
அப்போது, " ஆங்கிலத்தில் பேசமாட்டேன் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறுகிறார்" என்றார்.
இதுகுறித்து ராகுலம் காந்தி மேலும் கூறுகையில், " அதிகாரத்தை அடைய ஆங்கிலம் ஒரு கருவி. ஆங்கிலம் மக்களின் மிகப்பெரிய ஆயுதம்.
பட்டியலின, பழங்குடியின மற்றும் ஏழை மக்கள் உயர்ந்த நிலைக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஆங்கிலம் கற்கக் கூடாது என ஆர்எஸ்எஸ் கூறுகிறது.
ஆங்கிலம் கற்றுக் கொண்டால் உலகம் முழுக்க சென்று எந்தவொரு நிறுவனத்திலும் பணிபுரியலாம்" என்றார்.
Next Story
×
X