என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![விரைவு ரயிலின் எஞ்சினில் இருந்து பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு! விரைவு ரயிலின் எஞ்சினில் இருந்து பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு!](https://media.maalaimalar.com/h-upload/2024/06/28/2938938-3.webp)
X
விரைவு ரயிலின் எஞ்சினில் இருந்து பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு!
By
மாலை மலர்28 Jun 2024 2:35 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பலத்த சத்தத்துடன் எஞ்ஜினில் இருந்து பெட்டிகள் தனியாக பிரிந்தன.
- சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எர்ணாகுளம் - டாடா நகர் விரைவு ரயில் இன்று காலை கேரளா மாநிலத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் பிரதான பகுதியில் இருந்து பலத்த சத்தத்துடன் எஞ்ஜினில் இருந்து பெட்டிகள் தனியாக பிரிந்தன. இந்த சம்பவமானது காலை 9.30 மணியளவில் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் எஞ்ஜில் இருந்து மூன்றாவது பெட்டி விலகியுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பிரிந்து நின்ற பெட்டிகளை சரி செய்து எஞ்சினுடன் இணைத்ததால் ரயில் மீண்டும் இயக்கப்பட்டது.
சம்பவம் நடந்த போது ரயில் மெதுவாக நகர்ந்ததாகவும், பயணிகள் யாருக்கும் எந்த காயமும் எற்படவில்லை எனவும் அதிகாரிகள் கூறினர். ரயில் எஞ்ஜினில் இருந்து பிரிந்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
X