என் மலர்
இந்தியா
ஜூன் 4-ந்தேதி மேற்கு வங்கம், ஆந்திராவில் கூடுதல் பாதுகாப்பு
- வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
- வாக்குகள் அனைத்தும் நாளை மறுநாள் (4-ந்தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
543 தொகுதிகளை கொண்ட இந்திய பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த 2½ மாதங்களுக்கு மேலாக நடந்து வந்த தேர்தல் நேற்றுடன் நிறைவு பெற்றது.
வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்குகள் அனைத்தும் நாளை மறுநாள் (4-ந்தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதற்கான அனைத்த ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து உள்ளது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று மேற்கு வங்கம், ஆந்திரப்பிரதேசத்தில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
2 மாநிலங்களில் தேர்தல் தொடர்பான வன்முறை ஏற்பட்டதால் வாக்குகள் எண்ணப்பட்டு 15 நாட்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.