என் மலர்
இந்தியா

மகாராஷ்டிராவில் விவசாயிகளின் தற்கொலை கவலை அளிக்கும் விதமாக உள்ளது: சரத் பவார்

- மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு 2,635 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக அமைச்சர் தகவல்.
- விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு கொள்கை தயார் செய்ய வேண்டும்.
மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை கவலை அளிக்கும் விதமாக உள்ளது. விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு இதற்கு கொள்கை வகுக்க வேண்டும் என சரத் பவார் வலியுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு 2,635 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக, சட்டசபையில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக சரத் பவார் கூறுகையில் "மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகளில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை தொடர்பாக வெளியான தகவல் கவலையளிக்கும் விதமாக உள்ளது. நாங்கள் வெவ்வேறு இடங்களில் சரியான தரவுகளை சேகரிக்க உள்ளோம். விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு கொள்கை தயார் செய்ய வேண்டும்.
இவ்வாறு சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மேலும், சரத் பவார் கட்சியின் ஜெயந்த் பாட்டீல் அஜித் பவார் கட்சிக்கு மாற இருப்பதாக தகவல் வெளியானது குறித்து கேட்க கேள்விக்கு, இது தொடர்பாக மீடியாவுக்கு அவர் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்" என்றார்.
பாராமதியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது ஜெயந்த் பாட்டீல் சரத் பவாரை சந்தித்து பேசினார். பின்னர், தான் விரக்தியில் உள்ளது. தன்னுடைய கருத்தில் இருந்து தவறான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.