என் மலர்
இந்தியா
பா.ஜ.க.வின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் டெல்லி பெண்களுக்கு ரூ. 2500 வழங்குவதற்கான ஒப்புதல்: பிரதமர் மோடி
- டெல்லிக்கு மோதல் அரசு தேவையில்லை, மாறாக வளர்ச்சியை உறுதி செய்ய மத்திய அரசுடன் ஒருங்கிணைந்த அரசாங்கம் தேவை.
- டெல்லியில் உள்ள அனைத்து ஏழைகளும் கான்கிரீட் வீடு கட்ட மோடி உதவி செய்வார். இது என்னுடைய உத்தரவாதம்.
டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் முடிவடைய இன்னும் மூன்று நாட்களே உள்ளன. பிப்ரவரி 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இன்று துவார்காவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
* இரட்டை இன்ஜின் அரசு அமைந்து டெல்லிக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பை மக்கள் எனக்கு அளிக்க வேண்டும்.
* டெல்லியின் முன்னேற்றத்திற்கான எந்த விசயத்தையும் பாஜக அரசு விட்டு வைக்காது. இதை நான் உறுதியாக கூறுகிறேன்.
* ஆப்டா (AAPda) அரசியல் ஆதாயத்திற்காக டெல்லியின் பணத்தை கொள்ளையடித்து மற்ற மாநிலங்களில் வழங்குகிறது.
* டெல்லிக்கு மோதல் அரசாங்கம் தேவையில்லை, மாறாக வளர்ச்சியை உறுதி செய்ய மத்திய அரசுடன் ஒருங்கிணைந்த அரசாங்கம் தேவை.
* டெல்லியில் உள்ள அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் (pucca houses) வழங்க வேண்டும் என்பது எனது கனவு. இதை நிறைவேற்ற விடாத வகையில் ஆப்டா வேலை செய்து கொண்டிருக்கிறது.
* பொய் மற்றும் கொள்ளையடிப்பதில் இருந்து டெல்லியை விடுவிக்க நாம் ஒன்றிணைவோம்.
* ஏழைகளுக்கு முழுமையாக கட்டப்பட்ட கான்கிரீட் வீடுகளை வழங்க ஆம் ஆத்மி அனுமதிப்பதில்லை. ஆனால் அவர்களுக்கு ஷீஷ் மஹாலை உருவாக்குகின்றனர்.
* டெல்லியில் உள்ள அனைத்து ஏழைகளும் கான்கிரீட் வீடு கட்ட மோடி உதவி செய்வார். இது என்னுடைய உத்தரவாதம்.
* அன்னா ஹசாரே இயக்கத்தின்போது, நாட்டின் அரசியலை மாற்றப்போவதாக வாக்குறுதி அளித்தார்கள். அன்னா ஹசாரே மற்றும் மக்களுக்கு எப்படி துரோகம் செய்தார்கள் என்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.
* இரட்டை இன்ஜின் அரசு யமுனை மற்றும் அதன் கரையோரங்களை மாற்றும். டெல்லியின் எதிர்காலத்தை மாற்றும்.
* ஆம் ஆத்மி மக்களுக்காக டெல்லி பணத்தை செலவழிக்கவில்லை. அவர்களுடைய சொந்த விளம்பரத்திற்காக பயன்படுத்தினார்கள்.
* ஆம் ஆத்மி வளர்ச்சிக்காக டெல்லி பட்ஜெட்டில் 20 சதவீதம்தான் செலவிடுகிறது. கட்டமைப்பு பட்ஜெட்டை அதிகப்படுத்தவில்லை.
* பாஜக அமைச்சரவை கூட்டத்தின் முதல் முடிவு பெண்களின் வங்கி கணக்கில் ரூ. 2500 செலுத்துவதுதான்