என் மலர்
இந்தியா
மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம், மெட்ரோவில் 50% தள்ளுபடி: ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கை
- யுமுனை நதி சுத்தம் செய்யப்படும். அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரம் குடிநீர் வினியோகம்.
- ஐரோப்பிய நாடுகள் தரநிலையில் சாலைகள் அமைக்கப்படும்
டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. 3 நாள் கழித்து வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே பெண்களுக்கு மாதந்தாறும் 2100 ரூபாய், இலவச மருத்துவம் உள்ளிட்ட வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் அறிவித்து, அதற்கான விண்ணப்ப வேலைகளையும் தொடங்கி வைத்தார்.
தேர்தல் தேதி அறிவித்த பிறகு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் பல்வேறு இலவச வாக்குறுதிகளை அளித்தன. பாஜக மூன்று கட்டங்களாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளுடன் மொத்தம் 15 வாக்குறுதிகள் "கெஜ்ரிவாலின் உத்தரவாதம்" என்ற பெயரில் இடம் பெற்றுள்ளது.
* பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். மெட்ரோ ரெயில்களில் பயணம் மேற்கொள்ள 50 சதவீத கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* யுமுனை நதி சுத்தம் செய்யப்படும்
* அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரம் குடிநீர் வினியோகம்
* ஐரோப்பிய நாடுகள் தரநிலையில் சாலைகள் அமைக்கப்படும்
உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
2020 தேர்தலில் இடம் பெற்றிருந்த வாக்குறுதிகளில் சில வாக்குறுதிகளில் தற்போது இடம் பெற்றுள்ளது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாததற்கு கொரோனா, பாஜக தன்னையும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களையும் குறிவைத்ததுதான் முக்கிய காரணம் என்றார்.
2022 மே மாதத்தில் இருந்து ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், சத்யேந்திர ஜெயின், சிசோடியா மற்றும் கெஜ்ரிவால் ஆகியோர் பண மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க றையில் இருநது விடுதலையானார்கள்.
2015 தேர்தலில் ஆம் ஆத்மி 70 இடங்களில் 67-ல் வெற்றி பெற்றிருந்தது. 2020-ல் 62 இடங்களில் வெற்றி பெற்றது.