search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜி.டி.பி. வளர்ச்சி 6.3 முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும்: பொருளாதார ஆய்வு அறிக்கையில் தகவல்
    X

    ஜி.டி.பி. வளர்ச்சி 6.3 முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும்: பொருளாதார ஆய்வு அறிக்கையில் தகவல்

    • 2026 நிதியாண்டில் விலைவாசி உயர்வால் ஏற்படும் பணவீக்கம் ஆபத்து குறைவாகவே இருக்கும்.
    • 2025 நிதியாண்டின் 4-வது காலாண்டில் உணவு பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளது.

    பாராளுமன்றத்தில் நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

    அதன்பின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026-ம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) 6.3 சதவீதத்தில் இருந்த 6.8 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஆய்வு அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கியம்சங்கள்:-

    * பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

    * நிலையான தனியார் நுகர்வு உள்ளிட்டவைகளால் இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக உள்ளன. 2026 நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வாய்ப்புகள் சமநிலையில் உள்ளன.

    * அடிமட்ட அளவிலான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்த வேண்டும்.

    * காய்கறிகள் சீசன் மற்றும் காரிஃப் அறுவடை ஆகியவற்றால் 2025 நிதியாண்டின் 4-வது காலாண்டில் உணவு பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளது.

    * 2026 நிதியாண்டில் பொருட்களின் விலை உயர்வால் ஏற்படும் பணவீக்கம் ஆபத்து குறைவாகவே இருக்கும் என பார்க்கப்படுகிறது. உலகளவிலான புவிசார் அரசியல் பதட்டங்கள் பணவீக்கத்தில் இன்னும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

    * 2024-ம் ஆண்டில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் புவிசார் அரசியல் பதட்டங்கள், அமெரிக்க தேர்தலைச் சுற்றியிருந்த நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றுக்கு மத்தியில் அமெரிக்க டாலர் வலுவான நிலையை பெற்றதாகும்.

    Next Story
    ×